TNY Party Logo

கட்சி அறிமுகம்

நெஞ்சுரைக்கும் வீரமும், மண்டியிடாத மானமும், விவசாயத்தை விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடு சமமாக வளர்க்கும் உத்தியும், அறிவியலில் புதியதோர் புரட்சியும் செய்யக்கூடிய ஆற்றலும் இளைஞர்களிடம் உள்ளது என்பதை நம் முன்னோர்கள் கணித்து இளைஞர்களே இந்த நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தும் சக்தி என்று குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கூற்றினை நாம் நிறைவேற்றவே இங்கு களம் காண்கின்றோம். நம் முன்னோர்கள் கூறியது பொய்யாகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்றது தான் இந்த ஜல்லிக்கட்டு புரட்சி. அந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் உருவானதே நம் தமிழ்நாடு இளைஞர் கட்சி.

எங்களை பற்றி

தமிழ்நாடு இளைஞர் கட்சி அறிமுகமானது அறிமுகமே இல்லாத மக்களின் மீது உண்மையிலேயே மாறா பற்றுக்கொண்ட இளைஞன் இளைஞி கூட்டம் ஒன்றாக சேர்ந்து உதயமான ஒரு கட்சி. அந்த தருணம் என்பது இந்த உலகமே உற்று நோக்கிய ஒரு நாள். ஆம், 2017இல் தமிழகத்தில் நடந்த ஒரு மாபெரும் அமைதி புரட்சியில் இளைஞர்களின் அமைதி புரட்சியில் தன்னுடைய தேவை, தன்னுடைய உரிமை, தனக்கானது என்று போராடும் ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்ற அந்த இளைஞர் கூட்டம் வெற்றியைக் கொண்டாட முடியாமல் அதிகார வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட போது தோன்றிய ஒரு எண்ணத்தின் வெளிப்பாடே இந்த நம் தமிழ்நாடு இளைஞர் கட்சி. இந்த கட்சியானது ஜல்லிக்கட்டு போராட்டத்தை சொந்தம் கொண்டாடவில்லை. சொந்தம் கொண்டாடவும் முடியாது ஏனெனில் அது ஒட்டுமொத்த தமிழகத்தின் இளைஞர்களுக்கும் சொந்தமானது. ஆனால், நாம் கொண்டாடுவது அந்தப் போராட்டத்தின் போது உருவான இந்தக் கட்சி ஒட்டுமொத்த இளைஞர்களுக்குமான கட்சி என்று இதனை கூறிக் கொள்ளும் போது மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறது. இந்தக் கட்சி எப்படி உருப்பெற்றது என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியை நமக்குத் தந்தது. ஆனால், அந்த வெற்றிக்கனியை நாம் ருசிக்க விடவில்லை. மாறாக வழக்கம்போலவே அரசியல்வாதிகள் அதை எடுத்து ருசித்து கொண்டனர். ருசித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தெரியாது இன்னும் மக்கள் பொய்யான அரசியல்வாதிகளையும் அவர்களின் பொய்யான நடிப்பையும் நம்பிக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்று. நாம் அன்று ஓர் முடிவு செய்தோம் ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால் தானே நம்மை அடக்க நினைத்தார்கள். ஒடுக்க நினைத்தார்கள். நாம் நமக்குத் தேவையான உரிமைகளை பெறுவதற்கு கூட போராட வைத்தார்கள். இந்த நிலை இப்படியே தொடர வேண்டுமா? என்று யோசித்து அன்று கூடிய இளைஞர் கூட்டத்தை வைத்து நாம் ஓர் இளைய சமுதாயமாக சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தக் காட்சியானது மட்டுமே எவருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பதிவுசெய்யப்பட்ட கட்சி என்று மார்தட்டி சொல்லுமளவுக்கு பதியப்பட்ட ஒரே கட்சி. மேலும், இளைஞர்கள் ஒரு கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று 2017 அன்று நாம் கட்சி ஆரம்பிக்க முனைந்த பொழுது நமக்கு கட்சி அங்கீகாரம் கொடுப்பதற்கு ஒரு வருட காலம் நம்மை அலைக்கழித்து இந்த கட்சி அங்கீகாரத்தை நாம் பெற்றுள்ளோம். அதற்காக நாம் கடந்து வந்த பாதை மிகக் கடினம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அன்றிலிருந்து இன்றுவரை நம்முடன் பயணித்து வரும் இந்த இளைஞர் சமுதாயம் ஆனது எந்தவித எதிர்பார்ப்புமின்றி பணம், பதவி, ஜாதி, மதம் இவை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மனிதம் போற்றும் மனிதர்களாய் நம்முடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயணமானது எப்பொழுது நிறைவேறும் என்றால் என்று ஓர் இளைஞர் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பில் வருகிறாரோ அன்றே இந்தப்பயணம் நிறைவுபெறும். அதுவரை இந்த பயணமானது எந்தவித தடங்கலுமின்றி எந்தவித அரசியலுக்கும் ஆட்கொள்ளாமல் தன் நோக்கத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும். நாம் இங்கு தேடிவந்தது ஆட்சியை மாற்ற அல்ல ! அரசியலையே மாற்றத்தை!! வா தோழா! இனி ஒரு விதி செய்வோம்! விதியினை மாற்றும் விதி செய்வோம்!!

கட்சி அறிமுகம்